பிரதான செய்திகள்

சிலாவத்துறை கமநல சேவை நிலையத்தில் கையாடல்! பிரதேசத்தின் சொத்து எங்கே?

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான உழவு இயந்திரத்தின் ஆறு டயர்கள் கையாடல் (களவு) செய்யபட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் வதிவிட பயிற்சி நெறிக்கு சென்ற வேலையில் இப்படியான கையாடல் (களவு) இடம்பெற்று இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இந்ந நிலையத்தின் பொறுப்பு  அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் அதிகாரி ஈரணை இளுப்பைக்குளம் கமநல சேவை நிலையத்தில் சுமார் 2லச்சம் ரூபா மக்கள் பணங்களை கையாடல் செய்தவர் என்றும் அறிய முடிகின்றது.

அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துகளை கையாடல் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

ஜப்பானில் தாதியர்களாக பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு …

Maash

வெடித்து தொண்டையில் சிக்கிய பலூனால் 11 வயது சிறுவன் உயிரிழப்பு . .!

Maash

உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் நாளை விசாரணை

wpengine