சிறையிலிருக்கும் 4 பிக்குகளும் ஒரே நேரத்தில் சுனவீனம்! – ஞானசாரர் இருந்த அதே வார்டில் சேர்ப்பு

ஹோமாகம நீதிமன்ற வளவில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நான்கு பிக்குகளும் ஒரே நேரத்தில் சுகவீனமுற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சிஹல ராவய மற்றும் இராவணாபலய இயக்கங்களைச் சேர்ந்த கிரம தேவிந்த, பியகம சுசில, பிட்டிகல தம்மவினீத, மதவாகல தம்மசார ஆகிய நான்கு பிக்குகளுமே ஒரே நேரத்தில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த 26ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட அவர்கள் நால்வரும் குறிப்பிட்ட வைத்திய அதிகாரி ஒருவரின் பரிந்துரையின்படி சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் எனவும், நால்வரும் ஒரே நேரத்தில் சுகவீனமுற்றது விசித்திரமாகத் தோன்றுவதாகவும் சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தற்போது பிணையில் விடுதலையாகியுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிகிச்சை பெற்று வந்த அதே மூன்றாம் இலக்க வார்டிலேயே இவர்கள் நால்வரும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares