பிரதான செய்திகள்

சிறுபான்மை மக்களுக்கு பதிப்பு! கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் அமைச்சர் றிஷாட்

(றிம்சி ஜலீல்)
மாகாண சபைகள் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் மாகாண சபைகள் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் பாராளுமன்றில் நிறைவேற்றப்படுமிடத்து சிறுபான்மை மக்களுக்கு பதிப்பாக அமையும் என்கின்ற விடையத்தை அன்மையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற விவாதங்களிலும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

உண்மையில் மாகாண சபைகள் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் நிறைவேற்றப்பட்டால் 212 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகளே கிடைக்கப்பெறும் ஆனால் முஸ்லிம்கள் விகிதாசாரப்படி(10%) ஆகக்குறைந்தது 20 தொகுதிகள் முஸ்லிம்களுக்குக் கிடைக்க வேண்டும். போனஸ் தவிர்ந்த மொத்த ஆசனங்கள் 437. அதில் முஸ்லிம்களுக்கு 42 ஆசனங்களாவது கிடைக்க வேண்டும்.

ஆனால் சிறுபான்மையினருக்கு கிழக்கில் 13 வடக்கில் 2 வடகிழக்கில் 15 ஆசனங்கள் ஏனைய 27 ஆசனங்கள் வடகிழக்குக்கு வெளியே பெறப்பட வேண்டும். ஆனால் 6 தொகுதிகளைத் தவிர வேறு ஆசனம் பெறமுடியாது இதனால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக குருநாகல் மாவட்டம் காணப்படுகின்றது.

சுமார் ஒரு லட்சம் முஸ்லிம் வாக்குகளைக்கொண்ட குருநாகல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை கூட பெறுவது கடினம். எனவே, பாதி ஆசனங்களையாவது சிறுபான்மையினர் இழக்கப்போகின்றோம்.

இந்தப் பின்னணியில்தான் 22ம் திகதி பாராளுமன்றத்திற்க்கு வரவிருக்கும் தொகுதி நிர்ணய அறிக்கையை 21 முஸ்லிம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்.

Related posts

அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக…!

wpengine

பாயீத் விடுதியின் சேவைகளை பாராட்டிய மாவட்ட LIONS CLUBS ஆளுனர்

wpengine

அக்கரைப்பற்று வலயத்தில் இம் மாத ஆசிரியர் சம்பளம் வழங்கப்படவில்லை! ஆசிரியர்கள் விசனம்

wpengine