பிரதான செய்திகள்

சிறுநீரக நோயை ஒழிக்க தூய குடிநீர் திட்டம் அமைச்சர் றிசாட் பங்கேற்பு

நாட்டின் தேசிய பிரச்சினையாகியுள்ள சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு தூய குடிநீர் வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

வடமத்திய மாகாணத்திலேயே அதிக அளவிலான சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக புள்ளி விவரத் தகவல்கள் கூறுகின்ற போதிலும், இந்த நோய் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று வவுனியா மாவட்டத்தில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

நாட்டில் வருடமொன்றிற்கு ஐயாயிரம் பேர் புதிதாக சிறுநீரக நோயினால் பீடிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் என, பிபிசி செய்திகள் கூறுகின்றன.

சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவுமாறு உலக நாடுகளிடமும், நாட்டின் வர்த்தக சமூகத்தினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு உரிய உதவிகள் கிடைத்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

இன் நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ,பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் இன்னும் பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.13417604_1413817845311158_3425885891208341887_n13450207_1413817908644485_7358373325719765163_n

Related posts

முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம் தேவை! தனவந்தர்கள் முன்வர வேண்டும்-அமைச்சர் றிஷாட்

wpengine

அதிக செலவினங்களை கருத்தில் கொண்டு! பொதுத்துறை ஆட்சேர்ப்புகளை முடக்க அரசாங்கம் தீர்மானம்

wpengine

2022 வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம்!

wpengine