பிரதான செய்திகள்

சிறிசேனவிற்கு எதிராக அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்ட வட மாகாண ஆளுநர்

கொழும்பு அரசியலில் அதிரடியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருப்படுகின்றது. குறிப்பாக முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அண்மையில் ஆளுநர்கள் பதவி விலகியதை தொடர்ந்து புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வடமாகாணத்தில் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கு மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்படமாட்டாது என கொழும்பு அரசியல் தகவல்களில் இருந்து அறியமுடிகின்றது.

ரெஜினோல்ட் குரே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் இணைந்து சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் 23 உறுப்பினர்கள் ரெஜினோல்ட் குரேயின் இல்லத்தில் ஒன்று கூடி அண்மையில் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியிருந்ததாகவும், இதன் காரணமாகவே சுதந்திரக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பை அடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து ஆளுநர்களையும் பதவி துறக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தற்போது எட்டு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்துக்கும் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், சப்ரகமுவ மாகாணத்துக்கு மட்டுமே இன்னும் எவரும் நியமிக்கப்படவில்லை.

ஜனாதிபதியிடம் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக மன்னிப்புகோரும் பட்சத்திலேயே அவருக்கு அப்பதவி வழங்கப்படலாம்.

எனினும், ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்கும் நிலைப்பாட்டில் ரெஜினோல்ட் குரே இல்லையென கொழும்பு அரசியலில் இருந்து அறிய முடிகின்றது.

எவ்வாறாயினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் ஹக்கீமின் சபையில் கொழும்பில் நீர் வெட்டு

wpengine

ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு இந்திய மத்திய அரசு 5 வருட தடை விதிப்பு

wpengine

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள்! ஆப்பு வைக்கும் வடக்கு முதலமைச்சர்

wpengine