பிரதான செய்திகள்

சிறந்த ஆண் மொடலுக்கான விருது இலங்கையருக்கு!

2017ஆம் ஆண்டுக்கான ஏஷியா ஃபெஷன் விருது வழங்கும் விழாவில், இலங்கையின் ஆண், பெண் மொடல்கள் உட்பட மூன்று பேர் விருது பெற்றுள்ளனர்.

 

சீனாவின் ச்சொங்கிங்கில் கடந்த 27ம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் அனைத்து கிழக்காசிய நாடுகளுடன் இலங்கை, இந்தியா, நேபாள் ஆகிய தெற்காசிய நாடுகளும் கலந்துகொண்டன.

இலங்கை சார்பில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு, தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் உட்பட, மேற்படி நாடுகளின் நவநாகரீக ஆடை, அணிகலன் உற்பத்தித் துறையின் பிரதிநிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட இலங்கை ஆண் மொடலான டிமரோன் கார்வலோ, பெண் மொடல் ஜெயமாலி எரங்கிக்கா விஜேசூரிய மற்றும் ஃபெஷன் பாடகியான நதிலி சமரசிங்க ஆகியோர், மேற்படி நிகழ்வில் சிறப்பாகப் பங்களித்தனர்.

இறுதி நிகழ்வின்போது, ஆசியாவுக்கான சிறந்த ஆண் மொடலாக இலங்கையின் டிமரோன் கார்வலோ தெரிவுசெய்யப்பட்டார். இது, இலங்கையின் ஃபெஷன் துறையின் முக்கியமான ஒரு அடையாளமாகக் கருதப்படக்கூடியது.

டிமரோன் உட்பட ஜெயமாலி, நதிலி மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் லூ ச்சிங் வோங் ஆகியோர் ஆசியாவின் சிறந்த கலைஞர்கள் என்ற விருதுக்காக முன்மொழியப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன் போராட்டம்.

Maash

மைத்திரியினை சந்தித்த அமைச்சர் சரத் பொன்சேகா

wpengine

ஈஸ்டர் சூத்திரதாரிகள் அதிகாரத்தைக் கொண்டு சாட்சிகளை அழித்த சூழலிலேயே ஆட்சியமைத்திருக்கின்றோம்.

Maash