செய்திகள்பிரதான செய்திகள்

சிரேஷ்ட ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல்; பொலிஸ்மா அதிபரிடம் ரிஷாட் எம்.பி முறைப்பாடு!

ஊடகப்பிரிவு- 

“நாம் ஊடகர்” பேரவையின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல்.மப்றூக் மீதான தாக்குதல், ஊடக சுதந்திரத்திற்கும் ஜனநாயக மதிப்புகளுக்கும் எதிரான கடுமையான செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் யூ.எல்.மப்றூக் மீதான தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,

மேற்படி தாக்குதல் சம்பவம் ஊடகத் துறைக்கு பெரும் சவாலாகும். ஜனநாயகத்தை மதிக்கும் எவராலும் இதுபோன்ற வன்முறையை அனுமதிக்க முடியாது.

யூ.எல்.மப்றூக் போன்ற நேர்மையான மற்றும் நடுநிலை செய்தியாளர்களை குறிவைக்கும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அரசியல் வாங்குரோத்தின் வெளிப்பாடாகும். வன்முறை கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவர்களுக்கு, கடந்த காலத்தில் மக்கள் தக்கபாடம் கற்றுக்கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ள அவர், இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பொலிஸ்மா அதிபர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “26 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில்” ஜனாதிபதி.

Maash

இலங்கையில் திருணம் நடாத்த தடையா? சுகாதார நிலையத்தில் ஆலோசனை

wpengine

இப்போது நாங்கள் மூன்று பேர்’ தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பிணி

wpengine