செய்திகள்

சிசிடிவி கமரா இருந்தால் மட்டுமே வீதி அனுமதி பத்திரம்! தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர்.

தனியார் பேருந்துகளில் சிசிடிவி பாதுகாப்பு கமரா இருந்தால் மாத்திரமே தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார். 

மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

பொதுப் போக்குவரத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக நீண்ட கால வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என்றும், பொதுப் போக்குவரத்தைப் பெண்களுக்கான பொது இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

Related posts

சிறைச்சாலை அதிகாரி சுட்டுக்கொலை – துப்பாக்கிதாரி போலி கடவுச்சீட்டுடன் கைது .

Maash

ஜப்பான் அரசாங்கம் மற்றும் (UNFPA ) ஆகியன இணைந்து வடக்கு சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன.

Maash

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு, பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு!

Maash