பிரதான செய்திகள்

சிங்கள மக்களின் மனநிலையை சம்பந்தனால் மாற்ற முடியுமா

சிங்கள மக்களின் மனநிலையை சம்பந்தனால் மாற்ற முடியுமா என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.


யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

மகிந்த ராஜபக்ச வந்துவிட்டால் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்ற தோரணையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பேச ஆரம்பித்துள்ளார்.

அடுத்த தேர்தல் வருகின்ற போது மகிந்த ராஜபக்சவோ, அல்லது அவரது அமைப்பை சார்ந்தவர்களோ, அவரது கட்சியை சார்ந்தவர்களோ வந்தால் சம்பந்தன் ஐயா அப்போது என்ன செய்யப் போகிறார்?

அப்போது அவரால் என்ன செய்ய முடியும்? சிங்கள மக்களின் மனநிலையை சம்பந்தன் ஐயாவால் மாற்ற முடியுமா?

தற்போது இருக்கின்ற கள நிலவரங்களை பார்க்கின்ற போது மகிந்த ராஜபக்ச சிங்கள மக்களின் வாக்குகளால் வெல்வார் என பேசப்படுகிறது.

அது சரியோ, தவறோ, வெல்வாரோ, வெல்லமாட்டாரோ என்பது வேறு விடயம். ஆனால் தனி சிங்கள வாக்குகளால் அவர்கள் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போது அரசாங்கம் கவிழ்ந்து போனால் அவர்கள் வருகின்றமை பிரச்சினை என்று கூறுகின்றவர்கள், தேர்தலில் வென்று அவர்கள் வந்தால் அதற்கு பதில் என்ன சொல்லப்போகிறார்கள்? என வினவியுள்ளார்.

Related posts

கொரோனா கடவுள் தந்த ஒரு வரம் டிரம்ப்

wpengine

இழப்புக்களை ஏற்படுத்தியவர்கள், பெற்றுக் கொண்டமையை விமர்சிக்கின்றனர். !

Maash

ஹக்கீமும் ரிஷாத்தும் புத்தளத்தில் இணைகிறார்கள்.

wpengine