பிரதான செய்திகள்

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம்! மு.கா. கட்சியில் குழப்பம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு (29) இடம்பெற்றது. கட்சியின் உள்ளக விவகாரங்களை விட சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் அங்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது.

கட்சியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் உட்பட சில உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கட்சியின் முக்கியஸ்தர்களான சாய்ந்தமருது பிர்தௌஸ், நிந்தவூர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ஆகியோர் சாய்ந்தமருதுவில் தாங்க்ள முகங்கொண்ட விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் விடயங்களை விபரித்து கவலையை வெளியிட்டனர்.

இருப்பினும், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் என்ற விடயத்தில் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் காணப்பட்டனர். அதனை வழங்க வேண்டும் என்பதில் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மிகக் கரிசனையுடன் காணப்பட்டனர்.

எனது தம்பி நிஸாம் காரியப்பர் தனிகுனிந்த நிலையில் மௌனியாகக் காணப்பட்டார் எனத் தெரிகிறது

சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.அவ்வாறு செய்யாவிடில் தங்களால் அங்கு அரசியல் செய்யவும் முடியாது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதற்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களின் செயற்பாடுகளைச் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கட்சிப் பணிகளை அவர் சரியாக முன்னெடுப்பதில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்புகளை அவர் வலுப்படுத்துவதில்லை. மாறாக, ‘மெஸ்ரோ’ அமைப்பைப் பலப்படுத்தி அதன் மூலம் தனது இருப்பைத் தக்க வைக்க முயற்சிக்கிறார்.

இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களின் நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் கொண்டிருந்தால் கட்சி தனித்து விடப்படும் என்ற அடிப்படையில் அங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில்,கட்சியின் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள், அனைத்து விடயங்களையும் மிகக் கரிசனையுடன் கேட்டவராக, சாய்ந்தமருது விவகாரத்தை தொடர்ச்சியாக இதே நிலையில் வைத்துக் கொள்ளக் கூடாது. இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Related posts

சுவிஸில் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து “புளொட்” அமைப்பின் மேதின ஊர்வலம் (படங்கள் இணைப்பு)

wpengine

பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட இர்ஷாத்துக்கு அழைப்பு

wpengine

ஜனாதிபதி அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

wpengine