சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கு தடையாக இருப்பது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே!

(எம்.வை.அமீர்)

சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, உள்ளுராட்சி சபையை பெற்றடுப்பதற்காக நான் கிழக்குமாகாண சபையில், தனிநபர் பிரேரணையை கொண்டுவந்து, தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றியதுடன் அதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை அன்றிருந்து இன்றுவரை செய்துவரும் இவ்வேளையில், அண்மையில் நானும் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியூதீன் அவர்களும் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர், பைசர் முஸ்தபா அவர்களைச் சந்தித்தபோது நமது மக்களின்
நியாயமான கோரிக்கைக்கு தடையாய் இருப்பது, நாம் நேசித்த முஸ்லிம் காங்கிரஸும் எமது மக்கள் வாக்களித்து பாராளமன்றம் அனுப்பியவர்களுமே காரணம் என அறிய முடிந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

சாய்ந்தமருது செஸ்ரோ (SESRO) அமைப்பின் ஏற்பாட்டில் மருதின் விழுதுகளை கௌரவிக்கும் நிகழ்வு, சாய்ந்தமருது பாரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்,  நேற்று 2016-05-08 ஆம் திகதி அவ் அமைப்பின் தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்றது. இங்கு இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை,இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை திட்டமிடல் சேவை, இலங்கை தொழில்நுட்ப சேவை மற்றும் அதிபர் போட்டிப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்ட, மொத்தம் 22 சாய்ந்தமருது மண்ணின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்து ஞாபக சின்னங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே கலாநிதி ஏ.எம்.ஜெமீல், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், சாய்ந்தமருதுக்கு மறைமுகமாக பல்வேறு கழுத்தறுப்புகள் இடம்பெறுவதாகவும், அதற்க்கு மறைந்த தலைவரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துணைபோவதாகவும் இவ்வாறான கழுத்தறுப்புகளுக்கு, அரசியல் அனாதைகளாக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும், அரசியல் என்பதோ அல்லது கட்சி என்பதோ மார்க்கமில்லை என்றும்
தெரிவித்தார்.blogger-image-638067103

சாய்ந்தமருது மக்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக அம்மண்ணை கௌரவிக்கும் நோக்குடன், கிழக்கு மாகாணத்துக்கு முதன் முதலாக அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவர், என்ற அந்தஸ்துள்ள பதவியை அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்கள் தனக்கு பெற்றுத்தந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் சாய்ந்தமருது மண்ணின் மைந்தன் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமை பாராளமன்ற உறுப்பினராக்க ஒன்றுபடுமாறும் அறைகூவல் விடுத்தார்.

கௌரவத்தைப் பெறும் இம்மண்ணின் மைந்தர்கள் தங்களது கல்வியை புத்தகங்களுடன் முடக்கிவிடாது பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் பாவித்து,
சாய்ந்தமருதின் கௌரவத்தை பாதுகாக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பங்குபற்றியதுடன் அமைப்பின் உயர்மட்ட அங்கத்தினர்கள் ஊர்பிரமுகர்கள் பொதுமக்கள் என பலர்
கலந்துகொண்டிருந்தனர் .

இங்கு நிகழ்வில் ‘மருதில் பெருவிழா 2016’ எனும் பெயரில் நினைவேடு ஒன்றும் வெளியிட்டுவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares