சாய்ந்தமருதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்,சிரேஸ்ட பிரஜைகள் சங்கம் ஆரம்பம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத் தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஜெமீல் தலைமையில் சிரேஸ்ட பிரஜைகள் சங்கம் நேற்று 22.05.2016ம திகதி ஞாயிற்றுக் கிழமை அவரது சொந்தப் பிரிவான சாய்ந்தமருது-15 இல் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று சிரேஸ்ட பிரஜைகள் சமூகத்திடையே மதிக்கப்படாமை,அரசியலில் ஓரங்கட்டப்படுகின்றமை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே குறித்த சங்கம் அ.இ.ம.காவின் வழி காட்டலின் கீழ் கலாநிதி ஜெமீலினால் சாய்ந்தமருதில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இச் சங்கத்தின் தலைவராக முன்னாள் ஓய்வு பெற்ற அதிபரும் முன்னாள் சாய்ந்தமருது மு.கா மத்திய குழுத் தலைவருமான எம்.எம் காசீம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.இதன் பொது உரையாற்றிய இவர் மு.காவும் அதன் தலைவரும் சாய்ந்தமருது மக்களை முனாபிக் தனமாக ஏமாற்றி வருகின்றனர்.இதன் பிறகும் நாம் ஏமாறாது அ.இ.ம.காவின் தலைமையும் அதன் பிரதித் தலைவரான கலாநிதி ஜெமீலையும் பலப்படுத்த சிரேஸ்ட பிரஜைகளாகிய நாம் ஒன்றுபட்டு பலப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.இன்ஷா அல்லாஹ் இது போன்று ஏனைய பிரிவுகளிலும் கட்டம் கட்டமாக இச் சங்கம் அமைக்கப்படுமென கலாநிதி ஜெமீல் தெரிவித்திருந்தார்.13254370_10204844266664863_9147706039653764848_n

இச் சங்கம் அமைக்கப்பட்டமை அ.இ.ம.காவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுமென பலராலும் கதைக்கப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது.இந் நிகழ்வில் அ.இம.காவின் எதிர்ப்பார்பையும் விஞ்சிய சிரேஸ்ட பிரஜைகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.13226737_10204844268264903_5270738289272588707_n

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares