பிரதான செய்திகள்

சாபி தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி வைத்தியசபையில் முறைப்பாடுகள் பதிவு

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மகப்பேற்று மருத்துவர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாபி தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, இன்றையதினம் பல்வேறு அமைப்புகளால் இலங்கை வைத்தியசபையில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


‘சுரக்கிமு சிறிலங்கா’ அமைப்பு, அகில இலங்கை பௌத்த மஹா சங்கம் மற்றும் சட்டத்தரணிகள் குழுகளுடன் சிவில் சமுக அமைப்புகள் பலதும் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளன.

முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுரக்கிமு சிறிலங்கா அமைப்பின் தலைவர் பாகியங்கள ஆனந்த சாகர தேரர், வைத்தியர் சாபி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இன்னும் அவர் குறித்து வைத்திய சபை விசாரணை நடத்தவில்லை.
எனவே அவர் தொடர்பான விசாரணைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிங்கள ராவய அமைப்பின் பிரதிநிதிகள் சிலர் இன்று சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு சென்றிருந்தனர்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை நடத்திய மொஹட் சஹ்ரான் உள்ளிட்டவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, பயங்கரவாத தடுப்பு பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ள போதும், அது தாமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பாக ஆராய்வதற்காக அவர்கள் அங்கு சென்றனர்.

இதுதொடர்பாக விபரங்களைக் கோரி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான மனு ஒன்றும் அவர்களால் கையளிக்கப்பட்டது.

Related posts

வர்த்தகர்களின் வரி உரிமத்தை இரத்து நடவடிக்கை – விவசாய திணைக்களம்!

Editor

39,553 பேர் இலங்கையர்களே நாடு திரும்பியுள்ளனர்.யாருக்கு வாக்களிக்க வந்துள்ளார்கள்

wpengine

தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் பதவியிலிருந்து விலகும் தி.பரஞ்சோதி..!

Maash