பிரதான செய்திகள்

சாதாரண பிள்ளையானுக்கு எங்கிருந்து வந்தது? வேறு ஒருவரின் வீட்டில் வாழும் பிள்ளையான்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான் (Sivanesathurai Santhirakanthan)), நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiya Rasamanickam) பகிரங்க சவாலொன்றை முன்வைத்துள்ளார்.

மட்டு ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நான் பிள்ளையானை பகிரங்கமாக விவாதத்திற்கு அழைக்கின்றேன், என்னுடைய சந்திவெளி காணியை மட்டுமல்ல கொழும்பிலிருக்கும் காணி, வேறு வேறு மாவட்டங்களில் இருக்கும் காணி என்பவற்றின் உறுதிகள் மற்றும் ஆதாரங்கள் என்பவற்றை நான் கொண்டு வருகின்றேன்.

நீங்கள் தற்போது லேக் வீதி மட்டக்களப்பில் வசிக்கும் வீட்டினை உங்களுடைய வீடு என்பதற்கான ஆதாரத்தை கொண்டு வாருங்கள்.

நாங்கள் மேசையிலே அந்த ஆதாரங்களை வைத்து மக்களிடம் கேட்கின்றோம் யாருடைய காணி யாருக்கு சொந்தமானது என்று.

இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும் அது சேம் தம்பிமுத்து அவர்களின் வீடு என்று.

அந்த வீட்டினை பிள்ளையான் பணம் கொடுத்து வாங்கினார் என்றால் அந்த பணம் சாதாரண ஒரு பிள்ளையானுக்கு எங்கிருந்து வந்தது?

இவ்வாறானதொரு பகிரங்க சவாலை நான் விடுக்கின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார். 

Related posts

அதிகாலை ஆனமடுவ மதீனா ஹோட்டல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

wpengine

ஜனாதிபதியின் வருகையின் பின் முக்கிய அமைச்சர் பதவி விலகவுள்ளார்.

wpengine

அடுத்த முதலமைச்சர் என்று தடுமாறிய விக்னேஸ்வரன்

wpengine