பிரதான செய்திகள்

சாதாரண தர பரீட்சையில் சித்தி அடையாதவர்களுக்கு சமுர்த்தி அமைச்சின் தொழில் வாய்ப்பு

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை வரை கல்வி கற்ற போதிலும் பரீட்சையில் சித்தியடையாத ஒரு லட்சம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச பணியில் சேர்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் 45000 பேர் அரச பணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2015 – 2019 ஆண்டு காலப்பகுதியினுள் 22,145 பேர் முழுமையான அரச சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதிவியேற்ற பின்னர் அபிவிருத்தி அதிகாரிகள் பதவிக்கு மாத்திரம் 60,000 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த 60,000 பேருக்கு வழங்கப்பட்ட பயிற்சி காலம் நிறைவடைந்து அவர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சாதாரண தரம் கற்ற அல்லது சதாரண தர பரீட்சையில் சித்தியடையாத ஒரு லட்சம் பேரை அரச பணியில் இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் பயிற்சிகளை நிறைவு செய்த 45000 பேர் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நுரைச்சோலை வீடுகளில் குடியிருக்க விடாது தடுத்தது போல! முசலியிலும் வாழ விடாது தடை போடுகின்றனர்-அமைச்சர் றிஷாட்

wpengine

மத்திய கிழக்கு போரினால் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர், ஒருவரின் நிலை கவலைக்கிடம்.

Maash

அமைச்சரின் வெள்ளிமலை விஜயம்

wpengine