சாதனை படைத்த இறக்காமம் மதீனா வித்தியாலய மாணவர்கள், வழிகாட்டிய சம்மாந்துறை ஆசிரியர்.

(மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார்)

2015 இல் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், அவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களுடன் கற்பித்த ஆசிரியரையும் கௌரவித்து பாராட்டும் விழா இன்று (2016.05.09) இறக்காமம் மதீனா வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றன.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இப் பாராட்டு விழாவில் தரம் 5 மாணவ-மாணவிகளுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களுடன் கற்பித்து பரீட்சைக்கு தயார்படுத்திய சம்மாந்துறையைச் சேர்ந்த ஆசிரியர் எம்.எல் அமீர் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

IMG-20160509-WA0047

இப் பாடசாலை மாணவர்கள் கடந்த ஒரு தசாப்த காலமாக புலமைப்பரீட்சையில் சித்தியடையாதிருந்து ஆசிரியர் அமீர் அவர்களின் கரிசனை மிக்க கற்பித்தலின் பின் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளர். 171 மற்றும் 154   புள்ளிகளைப் பெற்று இறக்காமம் கோட்ட மட்டத்தில் இரு மாணவர்கள் முதலிடம் பெற்றும் சாதனை படைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

13133312_1773507469602508_1677963856486759125_n

இக் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர் என பலரும் கலந்து கொண்டு ஆசிரியர் எம்.எல். அமீர் அவர்களுக்கு நினைவுச் சி்ன்னம் வழங்கி பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தர்.

13177077_1773507806269141_265867435350764727_n

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares