உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவூதி அரேபிய முஸ்லிம் ஊடகவியலாளர் கொலை விசாரணை கோரிக்கை

சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையிடம் துருக்கி கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை நிபுணர்களை நேற்று சந்தித்த துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கெவ்ஸ்லோக் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஊடகவியலாளர் ஜமால் கசோகி, துருக்கியில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி ஏற்பட்ட முரண்பாட்டில் கொல்லப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சவூதி அரேபியா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அதனை சவூதி மறுத்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என துருக்கி கோரியுள்ளது.

Related posts

பசில் இந்தியா உடன்படிக்கை! இன்று 40ஆயிரம் மெற்றி தொன் டீசல்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் கூட்டத்தை தடுத்து தேர்தல் திணைக்களம்

wpengine

மஹிந்த ராஜபக்ஷ் மாத்திரமே பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ளார்- அஸாத் சாலி

wpengine