பிரதான செய்திகள்

சர்வதேச ரீதியில் கடன் பிரச்சினை தீர்க்க! பிரதமர் பதவிக்கு ரணில்,பசில் பிரேரினை

2022 அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இன்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இதில் எந்தவித அடிப்படையும் இல்லை.  இது உண்மைக்கு புறம்பான கூற்று என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்கு கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர், பிரதமர் பதவிக்காக, பெசில் ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன. அதில், சர்வதேச ரீதியில் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே, அவரது பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது என்றார்

Related posts

மாகாண சபை தேர்தல் குறித்து! அரசாங்கம் கவனம்

wpengine

தேசிய போதனாவியல் ஆசிரியர் நியமன ஆரம்பச் சம்பள அளவுத்திட்டத்தில் தவறு-இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

wpengine

சாதாரண தர பரீட்சையில் சித்தி அடையாதவர்களுக்கு சமுர்த்தி அமைச்சின் தொழில் வாய்ப்பு

wpengine