சரத் பொன்சேகா ஜனநாயக கட்சி என்ற கட்சியை உருவாக்க நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புதிய கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் முன்னாள் இராணுவ அதிகாரிகளும் ஈடுபட உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கட்சியொன்றை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலை கருத்திற்கொண்டு புதிய கட்சி

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் தேர்தலை கருத்திற் கொண்டு கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

முன்னதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனநாயக கட்சி என்ற கட்சியை உருவாக்கினார். பின்னர் கட்சி கலைக்கப்பட்டு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகித்தனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares