பிரதான செய்திகள்

சரண் பிணை கைது மீண்டும் பிணை! ஞானசாரரின் மின்னல் வேகம்

பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கடை நீதவான் நீதிமன்றிற்கு சென்ற நிலையில் சற்று முன்னர் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். என தெரிவிக்கப்படுகின்றது.

தேரர் மீதுள்ள ஒரு முறைப்பாட்டுக்கு அமைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளனர். இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த தேரர் தொடர்ந்து தலைமறைவாகி வந்த நிலையில் இன்று காலை கொழும்பு கோட்டை நீதிமன்றில் சரணடைந்தார்.

மேலும், கைது செய்யப்பட்ட தேரர் தற்போது புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கைதின் பின் பிணை

ஞானசார தேரருக்கு இரண்டவாது தடவையாக பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் ஊடாக வாக்குமூலம் ஒன்று பெறப்பட்ட நிலையில் கைதான தேரருக்கு புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் தேரர் முன்பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில் இல்லை

wpengine

வடக்கு மாகாண சபையின் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்

wpengine

இலங்கை, இங்கிலாந்து மோதும் 4 ஆவது போட்டி இன்று

wpengine