பிரதான செய்திகள்

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் இப்தார் நிகழ்வு

(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த இப்தார் நிகழ்வு  வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை வலயக்கல்வி அலுவலக முற்றவெளியில் இடம்பெற்றது.

இதன்போது விசேட மார்க்க சொற்பொழிவையும், துஆப் பிரார்த்தனையும் மௌலவி யூ.எல்.எம்.அமீன் நிகழ்த்தினார்.

இதில்கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், ரீ.கலையரசன், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், முன்னாள் கல்வி பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள், உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள்,  ஆசிரிய ஆலோசகர்கள், உலமாக்கள், வலயக்  கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

“வடபுலமே எங்கள் தாயகம்” மீளக்குடியேறும் உரிமையை எவரும் தடுக்க முடியாது! அமைச்சர் றிசாத்

wpengine

ஒரு நாளில் முகக்கவசம் அணியாத 1214 பேர் கைது

wpengine

மொட்டுக்கட்சி தனித்துபோட்டியிடுவது குறித்து மந்திர ஆலோசனை

wpengine