பிரதான செய்திகள்

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூதூர் முஸ்லிம்கள் வீதியில்

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதனால் அதனை தடை செய்யுமாறு தெரிவித்து மூதூர் பசுமைக் குழுவின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதூர் பெரியபள்ளிவாயலுக்கு முன்னால் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய சந்தியில் இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வருகைதந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 11833142pROTEST (2)

சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படுமாக இருந்தால் திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை போன்ற மாவட்ட மக்கள் பல்வேறுபட்ட நோய்களுக்கு இலக்காவார்கள்.

அத்தோடு இயற்கை தாவரங்களும் அழியும் ஆபத்து நிலவும் எனவும் தெரிவித்ததுடன் இது சம்மந்தமாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வளமான எதிர் காலம் என்ற பதாகைகளை ஏந்தியவாறு மூதூர் பிரதேச செயலகத்திற்கு நடை பயணமாக சென்று மூதூர் பிரதேச செயலாளர் வீ.யுசூப் அவர்களிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

Related posts

தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்பதில்லை அமைச்சர் ஹக்கீம்

wpengine

அணு ஆயுத ஒப்பந்தம்! 60நாற்களில் ஈரானுக்கு பொருளாதார தடை

wpengine

இத்தாலி நாட்டில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்

wpengine