பிரதான செய்திகள்

சம்பந்தனை சந்தித்த மஹிந்த,நாமல்

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

இன்றைய தினம் காலை வேளையில் இரா. சம்பந்தனை சந்தித்த நாமலும், மஹிந்தவும் அவரது நலம் பற்றி விசாரித்துள்ளனர்.

சுகயீனம் காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் இன்று வீடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டாயமாக்கப்பட்ட பேருந்து சாரதிகள் சீட் பெல்ட்..!

Maash

ஜேர்மனியின் பயனர்களின் தரவுகளை சேகரிப்பதற்கு தடை

wpengine

வடமாகாண பாடசாலைகளுக்கு 13 ஆம் திகதி விடுமுறை

wpengine