பிரதான செய்திகள்

சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நான் அறிந்திருக்கவில்லை

எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்கள் மூலமே அறிந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த விடயம் தொடர்பில் இதுவரையிலும் கலந்துரையாடவில்லை எனவும் கூறியுள்ளார்.

பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற தலைக்கு எண்ணை தேய்க்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போது எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் இல்லையல்லவா? இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தின் மூலம் எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். அவர்கள் தற்போது அரசாங்கத்தின் பங்காளிகள். இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவரு குறித்து நான் அறிந்திருக்கவில்லை.

இது குறித்து ஊடகங்கள் மூலமே அறிந்துகொண்டேன். இந்த விடயம் தொடர்பில் இதுவரையிலும் கலந்துரையாடவில்லை.

எவ்வாறாயினும், நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுமா என்பது குறித்து தனக்கு தெரியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கலைஞர்கள் ,ஊடகவியலாளர்கள் நீதவான் பதவி -விஜயதாஸ ராஜபக்‌ஷ

wpengine

மு.காவின் உயர் பீட ஊஞ்சல் விளையாட்டு

wpengine

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலதிக தனியார் பஸ்கள் சேவையில்!

Editor