பிரதான செய்திகள்

சமூர்த்தி பயன்பாட்டாளர்களுக்கு இலவச மின்சாரம்-எஸ்.பி. திசாநாயக்க

எதிர்காலத்தில் சமூர்த்தி பயன்பாட்டாளர்களுக்கு சூரிய சக்தி மூலம் இலவசமாக மின்சாரம் வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறினார்.

எதிர்காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பதிலீடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஹிங்குராங்கொட, சமூர்த்தி மாதிரி கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் கூறினார்.

குறித்த வேலைத் திட்டத்தை இலங்கை மின்சார சபை மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சும் இணைந்து மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கூறினார்.

அதன்கீழ் அனைத்து வீடுகளுக்கும் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை பொருத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறினார்.

Related posts

வவுனியா வெடுக்குநாறி ஆலய விவகாரம்; வழக்கு விசாரணை எதிர்வரும் 24ம் திகதி வரை ஒத்திவைப்பு!

Editor

3குழந்தை பெற்ற பெற்றோரின் அவசர கோரிக்கை

wpengine

அமெரிக்க தூதுவராலயத்தை ஜெரூஸலத்துக்கு மாற்றும் டிரம்பின் தீர்மானத்தை முஸ்லிம்கள் ஜனநாயக ரீதியில் எதிர்க்க வேண்டும்!

wpengine