பிரதான செய்திகள்

சமூதாயம் படும் வேதனைகள் நீங்கி நிம்மதியாக வாழ பிராத்தீப்போம்! அமைச்சர் றிஷாட்

இனங்களுக்கிடையே சுமூகமான நல்லுறவு ஏற்பட்டு சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்க வேண்டுமென இந்தத் தியாக திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனை பிரார்த்திப்போம் என்று அகில இலங்கை மக்கள்
காங்கிஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்கள்
தியாகத்திருநாளை, தியாக உணர்வோடு கொண்டாடி வருகின்றனர். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து புனித மக்கமா நகரில் நமது சகோதரர்கள் ஒன்றுகூடி, அழுது, தொழுது,அல்லாஹ்விடம் பிரார்த்தித்து வருகின்றனர்.

நமக்கு அந்தப் பாக்கியம் இன்றைய நன் நாளில் கிடைக்காவிடினும் இப்ராஹிம் நபி, அவரது அருமை மகன் இஸ்மாயில் நபியின் தியாக உணர்வுகளை நினைத்துக் கண்ணீர் மல்கி நிற்கின்றோம்.

இன்றைய நன்நாளில் நமது சமூதாயம் படுகின்ற வேதனைகள் நீங்கி, நிம்மதியான வாழ்வு அவர்களுக்குக் கிட்டவேண்டுமென
அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

அந்நிய சமூகத்துடன் அன்பாக நடந்து அவர்களுடன் நல்லுறவைப் பேணுவோம். ஒருவருக்கொருவர் உதவிசெய்து இஸ்லாமிய வழிமுறைகளை நன்முறையாகக் கடைப்பிடித்து வாழ இத்திருநாளில் உறுதி பூணுவோம். இன்னும்
அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது சகோதரர்கள் விரைவில் தமது
சொந்த இடம் திரும்பி இயல்பான வாழ்வைத் திரும்பப்பெற இந்நன் நாள் உதவவேண்டும்.

உலகில் வாழும் முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளிலிருந்து விடுபட்டு
நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்வதற்கு இந்த நாள் வழிகோல வேண்டும்.

முஸ்லிம் நாடுகளில் வேண்டுமென்றே
பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றிக்கிடையிலான வல்லாதிக்க
சக்திகளின் போக்கை முறியடிக்கும் வகையில் நமது பிரார்த்தனைகளை அமைத்துக் கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்காவை மீண்டும் மிரட்டுகிறது வட கொரியா; நீர் மூழ்கி அணு ஏவுகணை வெற்றிகரமாக பரிட்சிப்பு

wpengine

அவிசாவளையில் மோதல்! பதட்ட நிலைமை! மனோ கணேசன் நேரில் விஜயம்!

wpengine

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம்! டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

wpengine