பிரதான செய்திகள்

சமுர்த்தி வங்கியில் பணம் பெறவந்தவர் காதை கடித்துள்ளார்.

சிலாபம், முந்தல், புளிச்சக்குளம் சமூர்த்தி சங்கத்தின் நிர்வாக சபையின் செயலாளரின் காதை கடித்தை ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


52 வயதான நபரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.


சமூர்த்தி உதவி தொகையை பெற்றுக்கொள்வது தொடர்பாக புளிச்சகுளம் சமூர்த்தி வங்கி முகாமையாளர் மற்றும் சங்கத்தின் நிர்வாக சபை செயலாளர் ஆகியோருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், பணத்தை பெற்றுக்கொள்ள வந்த நபர், சங்கத்தின் செயலாளரது காதை கடித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


கைது செய்யப்பட்ட நபர் நாளை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன.


இதன் காரணமாக வறுமை கோட்டின் கீழ் வாழும் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் நிதியுதவியை வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெசாக் அலங்காரம்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டமிடல் ஞானசார தேரர்

wpengine

பேஸ்புக் தடை மீண்டும் நீக்கம்

wpengine

பணியாளர்களை தாக்க முற்படும் பூஜித் ஜெயசுந்தர! பொலிஸ் பேச்சாளர் ஒரு சின்ன விடயம்

wpengine