பிரதான செய்திகள்

சமுர்த்தி பணத்தை கொள்ளையடிக்க ஐ.தே.க.முயற்சி

சமுர்த்தி வங்கிகளையும் மத்திய வங்கியின் கீழ் கொண்டுசென்று மக்களின் பணத்தை கொள்ளையடிக்க ஐக்கிய தேசியக் கட்சி  முயற்சிக்கின்றது  என  சுதந்திரமானதும்  நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

 

மாகாணசபைகளின் மூலமாக அழுத்தம் பிரயோக்கிகப்பட்டு இந்த களவுகளை தடுக்க வேண்டும் எனவும் அவர் ககுறிப்பிட்டார்.

சுதந்திரமானதும்  நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்  செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்.

நாட்டில் உள்ள சமுர்த்தி வங்கிகள் அனைத்தையும் மத்திய வங்கியின் கீழ் நிருவகிக்கும் முறைமையினை கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி இப்போது சமுர்த்தி வங்கிகளின் பணத்தையும் இலக்கு வைத்து அதையும் சூறையாடும் சதித் திட்டத்தை வகுத்துள்ளது. இதுவரை காலமாக ஐக்கிய தேசியக் கட்சியிடம் உரிய அமைச்சு இருக்கவில்லை. இப்போது புதிய அமைச்சரவையில் சமூக வலுவூட்டல் அமைச்சினை பெற்றுக்கொண்ட ஒரு வாரத்திலேயே சமுர்த்தி  வங்கிகளை இலக்கு வைத்துவிட்டனர். இன்று நாடு பூராகவும் 1074 சமுர்த்தி வங்கிகள் இயங்குகின்றன. இவை 331 மஹா சங்கங்களுக்கு கீழ் இயங்குகின்றன. இவை அனைத்திலுமாக சுமார் 1200 பில்லியன் ரூபா பணம் சேமிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே அரசாங்க பணம் அல்ல, முதலீட்டாளர்களின்  பணமும் அல்ல. வெறுமனே தினக் கூலியாகவும், நாளாந்தம் 300 ரூபாய்க்கும் கீழ் வருமானம் பெரும் மக்கள் சேகரித்து வைத்துள்ள பணமாகும்.

மேலும் இந்த சங்கங்கள் மத்திய வங்கியில் கீழ் செயற்படாதவையாகும். சில முகாமைத்துவ விடயங்களில் மாத்திரம் மத்திய வங்கியின் சில குழுக்கள் தலையிடும். ஆகவே இப்போது சமுர்த்தி வங்கிகளை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவந்து அவற்றின் பணத்தை மத்திய வங்கி மூலமாக பெற்றுக்கொண்டு அதன் மூலமாக அரசாங்கம்  தனது நெருக்கடிகளை சமாளிக்க முயற்சித்து வருகின்றது. அதற்காக  தற்போதுள்ள சட்டத்தையும் திருத்தி அதன் மூலமாக தமது நோக்கத்தை சாதிக்க முயற்சிக்கின்றனர். பாரளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் சட்டம் நிறைவேற்றப்படுவதில் சந்தேகம் இல்லை கள்ளர்களே ஆதரித்து வாக்களித்த பாரளுமன்றத்தில் இவ்வாறான களவுகளுக்கு துணை போகும் நடவடிக்கைகள் இடம்பெறுவது  ஆச்சரியப்படுவதற்கில்லை. எனினும் மாகாணசபைகள் அழுத்தம் கொடுக்க முடியும். அதன் மூலமாக இந்த செயற்பாட்டினை தடுக்க முடியும். ஆகவே நியாயமாக சிந்திக்கும் நபர்கள் இந்த செயற்பாட்டில் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும்.

இதற்கு முன்னர் கடந்த ஆட்சிக் காலங்களில் சமுர்த்தி பணத்தை கொள்ளையடிக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை கையாண்டது. முன்னைய ஆட்சியில் பலர் மீது இன்றும் வழக்கு விசாரணைகளை உள்ளன. ஆகவே சட்டம் கடினமாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். அவ்வாறு இருக்கையில் இந்த அரசாங்கம் சமுர்த்தி வங்கி பணத்தை கொள்ளையடிக்கும் செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

சிலாவத்துறை வைத்தியசாலை சிறுவர் நோயாளர் விடுதியினை திறந்து வைத்த வடமாகாண சுகாதார அமைச்சர்

wpengine

றிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

wpengine

போராட்டத்திற்கு சைவ மகா சபை உள்ளிட்ட சைவ அமைப்புக்கள் அழைப்பு.

wpengine