சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதில்லை தொழிற்சங்கம் கண்டனம்

வி.சுகிர்தகுமார்

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் இச்செய்தி தொடர்பில் தமது கண்டனத்தை தெரிவிப்பதாகவும், சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இச்செயற்பாடானது, தங்களது நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அலுவலக கடமைநேரம் தவிர்ந்த நேரங்களில் தமக்கு அரசியலில் ஈடுபடமுடியுமென அறிந்துள்ள போதிலும் தாம் அவ்வாறு எந்தவோர் அரசியல் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை எனவும்  தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், எந்தவோர் வேட்பாளருக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வாக்களிக்குமாறு தமது சங்கத்தை சார்ந்த எந்தவோர் உத்தியோகத்தரும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares