பிரதான செய்திகள்

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான ஊடக பயிற்சி நெறி! தமிழில் தேசிய கீதம்

சமுர்த்தி பிரதேச ஊடக
இணைப்பாளர்களுக்கான
மூன்று நாள் வதிவிட செயலர்வும், நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வும் சமுர்த்தி அபிவிருத்தி
திணைக்களத்தின் ஏற்பாட்டில் சென்ற வியாழன் தொடக்கம் (26) சனிக்கிழமை (28) வரை திருகோணமலை நிலாவெளி
சமுர்த்தி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடகப் பிரிவின் பொறுப்பாளர் சேனக்க உபசிங்க தலைமையில் நடைபெற்ற
இச்செயலர்வின் இரண்டாம் நாள் நிகழ்வில்
சமூக நலனோன்புகை மற்றும் கண்டி
மரபுரிமைகள் அமைச்சர் எஸ் .
வீ . திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு சமுர்த்தி பிரதேச ஊடக இணைப்பாளர்களுக்கான
சான்றிதழ்களையும் , நியமனக்
கடிதத்தினையும் வழங்கி வைத்தார் .

இந்நிகழ்வில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரெட்ண ,திருமதி தமரா திசாநாயக்க , மனித வள மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் சம்பிக்க களுவாராச்சி, சமுர்த்தி மாதாந்த சஞ்சிகையின் பொறுப்பாசிரியரும், சமுர்த்தி முகாமையாளருமான திருமதி சிராணி கககே உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உயர் அதிகாரிகள், ஊடக வளவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் விசேஷட அம்சமாக முதன் முதலில் தமிழில் சமுர்த்தி சத்தியப்பிரமாணம்
மற்றும் சமுர்த்தி கீதம் என்பன
இசைக்கப்பட்டன .

Related posts

“சட்டம் சமனானது” எனக் கூறும் இன்றைய அரசு தனது நிலைப்பட்டில் இருந்து மாறி, தனது சுய நிலைக்கு வருகின்றது.

Maash

ஒலுவில் கடலரிப்பும் முஸ்லிம் அரசியலின் இயலாமையும்.

wpengine

மன்னாரில்,வவுனியாவில் நித மோசடி

wpengine