பிரதான செய்திகள்

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு பழைய விலையில்

மண்ணெண்யைப் பயன்படுத்தும் மின்சார வசதி இல்லாத சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் மற்றும் பெருந்தோட்ட குடும்பங்களுக்கு மண்ணெண்ணையை மாத்திரம் பழைய விலையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 நிதியமைச்சு இதனை அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த சமூர்த்தி பயனாளிகளுக்கான மண்ணெண்ணை நிவாரணத்திற்கான முதலாவது கொடுப்பனவு ஜூன் மாதம் முதலாம் திகதி இருந்து வழங்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

மின்சாரம் இல்லாத சமூர்த்தி பயனாளி குடும்பங்களுக்கு அவர்களின் சமூர்த்தி கொடுப்பனவுக்கு மேலதிகமாக மண்ணெண்ணைய் மானியம் வழங்க கூடிய அளவு, திறைச்சேரியினால் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதுபோல் மீனவர்களுக்காகவும் குறித்த மண்ணெண்ணை சலுகை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

எரிபொருள் விலையினை குறைத்த நிதி அமைச்சு

wpengine

வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு பணமில்லை தேர்தலும் சந்தேகம்!

Editor

வவுனியா மாவட்ட செயலகத்தில் முற்றுகை

wpengine