பிரதான செய்திகள்

சமுகவலைத்தளத்தில் பிரதமர் உடன் சண்டை போடும் நாமல் ராஜபக்ச

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயம் குறித்து நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் வலைத்தளத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பிரதமரின் சீன விஜயத்திற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக தனிப்பட்ட ஆலோசகர்களை ஏன் வாடகைக்கு அமர்துகிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்திற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சு ஏன் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கேள்வி அவர் கேட்டுள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் புதிய வரி விதிப்பு கொள்கை பற்றி கருத்து வெளியிட்டுள்ள அவர்,

எதிர் வரும் ஏப்ரல் மாதம் அமுலுக்கு வரும் வரி விதிப்புகள், புது வருடத்தை கொண்டாடும் இலங்கையர்களில் பலருக்கு பிரச்சினையாக இருக்கும் எனவும் இதனால், புது வருடத்திற்கு பின்னர், அதனை அமுலுக்கு கொண்டு வருமாறும் கூறியுள்ளார்.

Related posts

புத்தளம் பகுதியில் காதலியை கொன்று விட்டு சரணடைந்த காதலன்..!

Maash

முசலி பிரதேச செயலகத்தில் தஞ்சமடைந்த சமுர்த்தி பயனாளிகள்! பலர் கவலை

wpengine

யாழில் சட்டவிரோத 4255 கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது..!

Maash