சமாதான ஓவியத்திற்காக ஜனாதிபதி பாராட்டு பெற்ற காத்தான்குடி ஓவியர் மாஹிர்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இனங்களுக்கிடையிலான இன நல்லுறவையும்,சமாதானத்தையும் சித்தரிக்கும் வகையிலான ஓவியத்தை மிகவும் திறமையாக வரைந்தமைக்காக காத்தான்;குடி-06ம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தையைச் சேர்ந்த ஓவியர் முஹம்மட் மாஹிர் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.

ஓவியர் மாஹிர் என காத்தான்குடி பிரதேச மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் இதற்கு முன்னரும்,இவ்வாறான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல சித்திரங்களை வரைந்து முன்னாள் ஜனாதிபதிகள் பலரினதும் ,அமைச்சர்களினதும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளதோடு மாவட்ட ரீதியான சித்திரம் மற்றும் கைப்பணிக்கண்காட்சிகளிலும் தமது ஓவியங்களையும்,கைப்பணிப் பொருட்களையும் காட்சிப்படுத்திப பல சான்றிதழ்களையும்,பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.93b67ae8-7e8a-4f61-b69f-85db50ce3b6b
இவர் காத்தான்குடி-06ம் குறிச்சியைச் சேர்ந்த ஆயிஷா உம்மாவின் புத்திரராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares