பிரதான செய்திகள்

சனத் நிசாந்தவை மக்களுக்கு யார் என்றே! தெரியாது – இசுறு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் புத்தளம்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவை மக்களுக்கு யார் என்பதே தெரியாது என மேல்மாகாணசபை முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.

 

மேல்மாகாண சபை முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியதன் பின்னரே இணையத்தின் மூலமாக மக்கள் அவரை அறிந்து கொண்டனர். அவ்வாறான நிலையில் தனது சொந்த அம்மா அப்பாவை யார் என்று தெரியாதென கூறுவது போல் தனக்கும் சுதந்திர கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பிரச்சாரம் செய்து கட்சிக்கு தனிப்பட்ட வகையில் பல அவதூறான விடயங்களை மேற்கொண்டு வந்தார். அதனாலேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்பட்டது என தெரிவித்தார்.

Related posts

3 இலட்சம் பேர் போதைபொருளுக்கு அடிமை: 4 புதிய புனர்வாழ்வு மையங்களை நிறுவ திட்டம்..!

Maash

இன்று நள்ளிரவுடன் மண்ணெண்னையின் விலை மாற்றம்

wpengine

உதய கம்மன்பிலவை சந்தித்த ஞானசார

wpengine