பிரதான செய்திகள்

சதோச நிலையத்தில் விலை குறைப்பு அமைச்சர் றிஷாட்

இலங்கை சதோச வர்த்தக நிலையங்களில் அரிசி மற்றும் பருப்பினை இன்று முதல் குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய  தினம்(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமைமைய அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, சம்பா அரிசி ஒருகிலோவை 78 ரூபாவுக்கும், நாட்டரிசி ஒருகிலோவை 73 ரூபாவுக்கும் பெற்றுக் கொள்ள முடிவதோடு, ஒருகிலோ பருப்பினை 148 ரூபாசுக்கு நாடுபூராகவும் உள்ள எந்தவொரு சதோச நிலையத்திலும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

Related posts

எங்களுடைய உரிமையை பெறுவதற்கு இன்றிருக்கின்ற ஒரேயொரு விடயம்தான், மாகாணசபை முறை மட்டும்

wpengine

பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்க தரிசனம் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பு

wpengine

அமைச்சர் றிசாட் பதியுதீன் மல்வானை விஜயம் (வீடியோ)

wpengine