சட்டவிரோத வாகன இறக்குமதி : சுங்க அதிகாரி உடந்தை

சுங்கத் திணைக்களத்திற்கு வரி செலுத்தாமல் சட்ட விரோதமான முறையில் கண்டெயினர் ஒன்றின் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த சட்ட விரோத வர்த்தகத்தின் பின்னால் ஓய்வு பெற்ற சுங்க உதவிப் பணிப்பாளர் ஒருவரும்;  தற்போது தொழில்புரியும் சுங்க அதிகாரி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்திற்கு கடந்த மாதம் 18 ஆம் திகதி 18 அடி நீளமான கண்டெயினரில் கொண்டு வரப்பட்ட வாகனங்களே நேற்று வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சுங்கத் திணைக்களத்தின் மேலும் சில அதிகாரிகளே இச்சம்பவத்தை சந்தேக நபர்களுக்கு தெரியாமல் வெளிகொணர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares