பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சட்டவிரோத பயணம் மன்னார்-கொண்டச்சி குடாவில் வைத்து 20பேர் கைது

சட்டவிரோதமாக நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முயற்சித்த 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – சிலாவத்துறை – கொண்டச்சிக்குடா பகுதியில் சந்தேகநபர்கள் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 04 பெண்களும் 14 ஆண்களும் 13 வயதுடைய சிறுமி ஒருவரும் 16 வயது சிறுவனும் அடங்குவதாக கடற்படையினர் கூறினர்.

04 முச்சக்கர வண்டிகளில் கடற்கரைக்கு சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வாழைச்சேனை, வத்தளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Related posts

ஜனாதிபதியின் கரங்களை நாங்கள் பலப்படுத்த வேண்டும்- ஹிஸ்புல்லாஹ்

wpengine

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை கொழும்பில்!

Editor

யாழ். மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் தமிழ் அரசியல்வாதிகள்.!

Maash