தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் தடை செய்யப்பட்ட போதும் VPN செயலி பயன்படுத்தி போலியான தகவல்கள் பரப்பப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறிய மூவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத ஆயுதங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் பொலிஸாரினால் முஸ்லிம் மக்களிடம் இலஞ்சம் பெறுவதாகவும், அதனை காட்டி கொடுப்பதாகவும் பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இந்தத் தகவல் பரப்பப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மாத்தறை பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமகாலத்தில் பேஸ்புக் உட்பட சமூகவலைத்தங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் VPN பயன்படுத்தி இந்த சந்தேக நபர்கள் இந்த தகவலை அனுப்பியுள்ளனர்.

இதன் மூலம் இனங்களுக்கு இடையில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கும், பொலிஸார் மற்றும் பொது மக்களுக்கு இடையில் மோதல் ஏற்படுத்துவதற்கும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் 34, 29, 27 வயதுடைய மாத்ததறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

VPN பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்புவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு பீல்ட் மார்ஷல் பொன்சேகா விஜயம்

wpengine

தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் சிறைச்சாலையில் வாடுகின்றனர்

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் பா.உ

wpengine