பிரதான செய்திகள்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார சத்தியப்பிரமாணம்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில், சற்றுமுன்னர்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ரஞ்ஜித் மத்தும பண்டார, பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சராக பதவிவகித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி தொடர்பில் அண்மைய காலமாக நீடித்த பிரச்சினைக்கு மத்தியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த அமைச்சை தற்காலிகமாக பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்.

Related posts

”கொலன்னாவ வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் – மறக்கப்பட்டு விட்டனரா?

wpengine

விடுதலைப்புலிகளினால் தற்போது சூழல் மாற்றமடைந்து விட்டது

wpengine

நீல ஆடையில் தலைக்கு எண்ணெய் வைக்கும் மஹிந்த

wpengine