பிரதான செய்திகள்

சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தில் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணி

அபே ஜாதிக பெரமுன எனும் பெயரில் இதுவரை செயலில் இருந்த அரசியல் கட்சி சமகி ஜன பலவேகய என பெயர் மாற்றம் செய்யப்பட்டமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.


சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தில் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணிக்காகவே அபே ஜாதிக பெரமுன இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


இதற்கமைய சமகி ஜன பலவேகயவின் தலைவராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ளார்.


இவ்வாறு கட்சியில் மேற்கொண்ட மாற்றம் குறித்து நேற்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவித்திருந்த நிலையில் இதற்கமைய தற்போது திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு கட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது.


அபே ஜாதிக பெரமுன தலைவராக சேனக சில்வா இருப்பதுடன், புதிய திருத்தத்திற்கு பிறகு சமகி ஜன பலவேகய துணை தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கன் விமான சேவையில் நடந்த ஊழல் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

wpengine

‘தொழில்களுக்கு கௌரவமாகத் திரும்புவோம்’ நிவாரண பொதி

wpengine

சஜித் விலகல்! டளஸ்சுக்கு ஆதரவு

wpengine