பிரதான செய்திகள்

சஜித் ஜனாதிபதி ஆனதும் தானே பிரதமர் என ரணில் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட எடுத்து கொண்ட காலம் அதிகம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அனுரதபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எந்த கொள்கை அறிக்கையை வெளியிட்டாலும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை என்றால் பிரயோசனம் இல்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச முதல் பேசுவதை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மறுநாள் பேசுகிறார்.

அவர் வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையும் கோத்தபாய ராஜபக்சவின் கொள்கை அறிக்கையை பார்த்து தயாரித்த கொள்கை அறிக்கை. அத்துடன் மக்களை ஏமாற்று விடயங்களை உள்ளடக்கி அந்த கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சிரிப்பை ஏற்படுத்தக் கூடிய 5 வார்த்தைகளுக்கு மேல் கூற வேண்டாம் என உதய கம்மன்பில, அண்மையில் சஜித் பிரேமதாசவுக்கு கூறியிருந்தார். எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னர் புத்தகம் ஒன்றை எழுதும் அளவுக்கு சஜித் பிரேமதாச மக்களுக்கு நகைச்சுவையான கருத்துக்களை கூறியுள்ளார்.

மக்கள் மட்டுமல்லாது கட்சியில் இருக்கும் சிலர் தன்னை பிரதமராக வைத்திருக்க விரும்பவில்லை என்பதாலேயே சஜித் ஜனாதிபதி ஆனதும் தானே பிரதமர் என ரணில் கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவை தோற்கடிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இதற்காகவே அமெரிக்காவுடன் மில்லேனியம் கோப்ரேஷன் உடன்படிக்கையையும் கைச்சாத்திட போவதாக கூறுகிறார்.

அதேவேளை ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சிலர் சஜித் பிரேமதாசவின் மேடையில் இருக்கின்றனர் எனவும் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரதமர் மோடியுடன் மாலைத்தீவு அதிபர் அப்துல்லா சந்திப்பு

wpengine

மாணவர்கள் இலட்சியத்தோடு வளரவேண்டும்! வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்.

wpengine

Mahargama Cancer Hospital urgent need a Pet-Ct-Scanner Machine -needed Rs. 200 million -please help

wpengine