பிரதான செய்திகள்

சஜித் என்னைப் பொம்மையாக்க வேண்டாம்.மனசாட்சிக்கு இணங்கவே ஆதரவளிப்பேன்

சஜித் பிரேமதாச(Sajith Premadasa) போன்று என்னைப் பொம்மையாக்க வேண்டாம். அப்படி நான் நடந்துகொள்ளமாட்டேன். எனது மனசாட்சிக்கு இணங்கவே அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தீர்மானங்களை எடுத்தேன். இதன்படி தொடர்ந்தும் தீர்மானம் எடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே (Diana Gamage) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

மழைக்கு ஒதுங்குவதற்காக எனது வீட்டில் இடமளித்த போது, வீட்டுக்குள் வந்தவர்கள் நான் இல்லாத நேரத்தில் வீட்டுத் திறப்பை மாற்றியது மட்டுமல்லாது என்னையே வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றனர், ஆனால் வீட்டின் உரித்து இன்னமும் என்னிடமே உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் என்னைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகக் கூறியதாகத் தெரிவித்து ஊடகவியலாளர்கள் என்னிடம் கேட்டனர். அப்படியொன்றும் நான் அறியவில்லை என்று அவர்களுக்குப் பதிலளித்தேன்.

என்னைப் பற்றி தீர்மானம் எடுக்கும் போது எனக்கு தெரியாது ஊடகங்களுக்குக் கூறுகின்றீர்கள். இந்த செயலுக்காக உண்மையிலேயே கட்சியின் செயலாளர் உள்ளிட்டோர் வெட்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த விடயம் கட்சியின் செயற்குழுவைச் சேர்ந்த சிலருக்குத் தெரியாது. எவ்வாறாயினும் என்னைக் கட்சியிலிருந்து நீக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபிள்ளைகள் போன்று நடந்துகொள்கின்றனர். உங்களின் கட்சிக்குள் வேண்டியளவுக்கு பிரச்சினைகள் உள்ளன. துண்டுகளாகப் பிரிந்துள்ளன. உங்களின் தலைவரிடம் வேலைத்திட்டங்கள் இல்லையெனக் கட்சியினர் கூறுகின்றனர். அங்கு பல்வேறு அணிகளாகப் பிரிந்து செயற்படுகின்றனர்.

நானும், கணவரும் இந்தக் கட்சியைக் கொடுத்த காரணத்தினாலேயே இவர்கள் இங்கே வந்துள்ளனர். இல்லாவிட்டால் இங்கிருப்பவர்களில் அரைவாசிப் பேருக்கு ரணில் விக்ரமசிங்க வேட்பு மனுவை வழங்கியிருக்கமாட்டார். இவர்களில் பலர் இங்கு இருக்கமாட்டார்கள். நான் இந்தக் கட்சியில் பொம்மை இல்லை.

இப்போதும் உறுப்பினரே. கட்சியின் உரிமையாளர் என்ற உறுப்பினராக இருக்கின்றேன். சஜித் பிரேமதாச போன்று என்னைப் பொம்மையாக்க வேண்டாம். அப்படி நான் நடந்துகொள்ளமாட்டேன். எனது மனசாட்சிக்கு இணங்கவே அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தீர்மானங்களை எடுத்தேன். இதன்படி தொடர்ந்தும் தீர்மானம் எடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்

Related posts

நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட முடியாது

wpengine

வவுனியாவில் பெண்களை அச்சுறுத்தும் நிதி நிறுவனங்கள்

wpengine

Dematagoda Kahiriya Girl School 4 floors building opend ZAM REFAI Haj

wpengine