சஜித் அணிக்கு ஆப்பு வைத்த ரணில் அணி

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழு, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் பொதுத்தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள 99 பேரை கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.


இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று காலை தலைமையகமான சிறிகொத்தவில் கூடியது.


இதன்போதே குறித்த 99 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் பொதுத்தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


கட்சி யாப்பின்கீழ் குறித்த 99 பேருக்கும் வேறு ஒரு கட்சியின்கீழ் போட்டியிடுவதற்கு எவ்வித எழுத்துமூல ஆவணமும் வழங்கப்படவில்லை என்று அண்மையில் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அதேநேரம் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு. இன்று பிற்பகல் எத்துல்கோட்டேயில் உள்ள தலைமையகத்தில் கூடுகிறது

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares