சஜித்தின் கட்சிக்கு தலைமைத்துவச் சபை இருக்க வேண்டும்! ஹக்கீம் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்திக்கு தலைமைத்துவச் சபை இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


அந்த தலைமைத்துவச் சபை எடுக்கும் தீர்மானங்களை கூட்டாக இணைந்து எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருக்கும் பிரதான தரப்பான எமது கட்சிக்கு கூட்டணிக்குள் முக்கிய பணி வழங்கப்பட்டுள்ளது.


தேர்தலுக்கு முன்னர் உருவாக்கப்பட உள்ளதாக கூறிய ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு திருத்தப்பட வேண்டும். இது குறித்து ஏற்கனவே கூட்டணியின் தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் மூலமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமனம் சம்பந்தமாக மகிழ்ச்சியின்மையை வெளிப்படுத்தியுள்ள ஹக்கீம், அந்த நியமனங்கள் சரியானது எனக் கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


பத்திரிகை ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares