கட்டுரைகள்பிரதான செய்திகள்

கோழி திருடிய கள்வர்கள்!ஹக்கீமின் விசுவாசத்துக்கான பத்மஸ்ரீ பட்டத்துக்கு சிபார்சு

 (ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருமலை மாவட்ட தேசியப் பட்டியலை (தௌபீக் தற்போது வகிக்கும் பதவி) அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சுழற்சி முறையில் வழங்கவுள்ளார் என நான் அண்மையில் எனது முகநூலில் ஒரு தகவலைப் பதிவிட்டேன். குறித்த எனது தகவலை நம்பாத பலர் தங்கள் விமர்சனங்களை முன்வைத்திருந்தேனர்.

ஆனால்,  நடந்தது என்ன? நேற்று நடைபெற்ற கட்சியின் பேராளர் மகாநாட்டில் அமைச்சரும் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“திருகோணமலைக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியலை பங்கீடு செய்வதற்கு நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம். தற்போது பாரிய பிரச்சினையாக எழுந்துள்ள தேசியப்பட்டியல் விவகாரத்துக்கு தாமதிக்காமல் விரைவில் தீர்மானம் எடுக்கவுள்ளோம். ” எனத் தெரிவித்திருந்தார்.

அன்று நான் கூறியதனை நிராகரித்து, அபப்டி எல்லாம் ஒன்றும் நடக்காது என்று கூறியவர்கள் இன்று எனக்கு என்ன பதில் தரப் போகிறார்களோ தெரியாது.

இதேவேளை, ‘கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தலைமத்துவத்தை வெளியேற்ற மு.கா முக்கியஸ்தர்கள் சதி முயற்சி! “ என்ற தலைப்பிலும் ஒரு பதிவை நான் எனது முகநூலில் பதிவிட்டிருந்தேன். அதில் “கொழும்பு கோட்டை பிரதேசத்திலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் வரவேற்பாளர் பிரிவில் கூடிய கட்சியின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் மூவர் உட்பட ஒன்பது பேர் (அனைவரும் உயர்பீட உறுப்பினர்களே) இது தொடர்பில் கலந்தாலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.” எனக் குறிப்பிட்டிருந்தேன். இதில் உள்ள உண்மைகளைப் பலரும் உணர்ந்தவர்களாக இருந்தும் சிலர் அப்படி ஒன்றும் இல்லை. அப்படியெல்லாம் நடக்காது என்றும் பதிவிட்டிருந்தனர்.

நான் அம்பலப்படுத்திய சதி முயற்சி தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் விரைவில் உண்மைகளை நிச்சயம் அம்பலப்படுத்துவார். இந்தச் சதி முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் அவர் உறுதிபட பகிரங்காக வெளியிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

மேலும் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மகாநாட்டுப் படங்களை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனைப் பார்த்த போது சிரிப்பதா? அழுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

ஏனெனில் உயர்பீட உறுப்பினர்கள் அமர்ந்திருந்த முன்வரிசையின் இரு நிரல்களிலும் இரண்டாவது வரிசையின் இரு நிரல்களிலும் குறித்த 5 நட்சத்திர ஹோட்டல் வரவேற்பாளர் பிரிவில் சதித் திட்டம் தீட்டியவர்கள் பலர் அமர்ந்திருப்பதனைக் கண்டுதான். நான் சிரிப்பதா? அழுவதா என்று என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

கோழி திருடிய கள்வர்கள் எப்படியெல்லாம் கூட உலாவுகிறார்கள் என்று பாருங்கள். தங்களை அப்பாவிகளாகும் தலைமைத்துவ விசுவாசிகளாகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு நடிப்பில் பத்மஸ்ரீ பட்டம் கொடுப்பதற்கு நான் சிபார்சு செய்கிறேன்.

Related posts

முசலி சுகாதார அலுவலகத்தின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் ஏற்பாடு

wpengine

இணையத்தள காணொளிகளுக்காக ஜிமெயிலின் புதிய வசதி!

wpengine

அமைச்சர் பதவி வகிப்பதற்கு கல்வித்தகமை எதற்கு

wpengine