பிரதான செய்திகள்

கோறளைப்பற்று வீதிக்கான வடிகால் அமைப்பினை திறந்து வைத்த அமீர் அலி

5.01.2017 ஆம் திகதி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை நைனா முஹம்மட் வீதிக்கான வடிகால் திறப்பு விழா முன்னாள் பிரதேச சபை  உதவித் தவிசாளர் நெளபல் தலைமையில் இடம்பெற்றது.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 2.00 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட வடிகால் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் நெளபல், பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத், கிராம சேவையாளர் திருமதி மதீனா,  அபிவிருத்திக் உத்தியோகத்தர் நஜீமா,  சமுர்த்தி  உத்தியோகத்தர் சாஜஹான் , கிராம அபிவிருத்தி சங்க  உறுப்பினர் பெளசுல் , அபிவிருத்திக் குழுக்  உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

சிங்கள இளைஞர்களின் “நைய்யாண்டி” மன்னாரில் பதட்டம்

wpengine

இத்தாலியில் நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

wpengine

படத்தில் முஸ்லிமாக மாரிய சம்பந்தன்,சுமந்திரன்! பலர் விசனம்

wpengine