கோரோனா வைரஸ்க்கு மருந்து தெரிவிக்கும் விராட்கோலி

சர்வதேச அளவில் கோரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில் உறுதியாகயிருந்து வைரசிற்கு எதிராக போராடுங்கள் என இந்திய அணித்தலைவர் விராட்கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்
டுவிட்டரில் விராட்கோலி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


நாங்கள் உறுதியாகயிருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதன் மூலம் வைரசிற்கு எதிராக போராடுவோம் என விராட்கோலி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.


பாதுகாப்பாகயிருங்கள் , எச்சரிக்கையாகயிருங்கள், வருமுன் காப்பதே சிறந்தது என்பதை முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என விராட்கோலி தெரிவித்துள்ளார்.


கேஎல் ராகுலும் கொரோனா வைரஸ் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.


இந்த இக்கட்டான தருணத்தில் நாங்கள் அனைவரும் உறுதியாகயிருந்து மற்றவர்கள் குறித்து அக்கறையுடன் இருப்போம் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.


சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாகயிருப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 486 total views,  3 views today

Comments

comments

Shares