கோட்டா பழைய பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் தம்பல அமிர தேரர்

பழைய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்காவிட்டால், அவருக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பிக்க போவதாக தம்பல அமிர தேரர் தெரிவித்துள்ளார்.


நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி ஜனாதிபதி ஜனநாயகமாக செயற்பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், ஜனாதிபதிக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும் எனவும் தம்பர அமில தேரர் கூறியுள்ளார்.


இணையத்தளம் வழியாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகளை சட்டரீதியாக மேற்கொள்ள உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.


எனினும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை எந்த வகையிலும் மீண்டும் கூட்டப் போவதில்லை எனபோவதில்லை என ஜனாதிபதி தெரிவித்து வருகிறார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares