அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசார் தெரிவு .

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய இரகசிய வாக்கெடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்றது.

கொழும்பு மாநகர சபை மேயருக்காக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசாரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரீஸா சரூக் போட்டியிட்டனர்.

இந்நிலையில், கொழும்பு மாநாகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரீஸா சரூக் 54 வாக்குகளையும் பெற்றனர்.

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக ஹேமந்த குமார தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வட மாகாண தொண்டராசிரியர்கள் சாகும்வரையிலான போராட்டம்

wpengine

அரசியலமைப்பின் எந்தவொரு சரத்தும் மீறப்படவில்லை

wpengine

அமீர் அலி அரச காணி விவகாரம்! பதில் சொல்லுவாரா?

wpengine