கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மன்னாரில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி நேற்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நிகழ்வுகளில் தொடர்ந்து நவ நாள் ஆராதனை திருப்பலிகள் இடம்பெற்று நேற்று நற்கருணை ஆராதனை இடம்பெற்றுள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.


மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இராணுவம்,பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.


வருகை தந்த பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares